தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி : கலெக்டர் ஆ.அண்ணாதுரை தலைமையில் ஏற்றுக்கொண்டனர்

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      தஞ்சாவூர்
Thanjayur 2017 05 19

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினமான மே 21ம் நாளை கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மவாட்ட ஆட்சி;த் தலைவர் ஆ.ஆண்ணாதுரை, தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று (19.05.2017) நடைபெற்றது

உறுதிமொழி

"அகிம்சை. சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராக நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும். வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும். அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றைப் போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறுவிளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்துப் போராடவும், நாம் உறுதி கூறுகிறோம்.’’ என்ற உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பின் தொடர்ந்து ஏற்றுக் கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாள் மணிமாறன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், அலுவலக மேலாளர் (குற்றவியல்) இமானுவெல்வாஸ், கார்த்திக் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: