முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர்.சிவஞானம் தலைமையில் உலக எச்.ஐ.வி. தடுப்பூசி விழிப்புணர்வு நாள் மற்றும் எய்ட்ஸால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர், பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மூலம் உலக எச்.ஐ.வி. தடுப்பூசி விழிப்புணர்வு நாள் மற்றும் எய்ட்ஸால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர்.சிவஞானம்.இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு எய்ட்ஸால் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்.

மேலும், “எச்.ஐ.வி ஃ எயிட்ஸ்-ஆல் இழந்தோரை நினைப்போம், இனி எவரையும் இழக்காமல் காப்போம்” என்ற உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,

இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட எச்.ஐ.வி. ஃ எய்ட்ஸ் தடுப்பு பணிகளில் ஒரு முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் பல்வேறு நிறுவனங்களை மாவட்ட அளவில் ஓருங்கிணைத்து எச.;ஐ.வி தடுப்பு மற்றும் ஆதரவு சேவைகளை அளித்து வருகிறது. எச்.ஐ.வி. உள்ளோர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் சிறந்த சிகிச்சைகள் வழங்கிட தமிழக அரசு  நம்பிக்கை மையங்கள், கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், இணைப்பு கூட்டு மருந்து சிகிச்சை மையம் மற்றும் கட்டணமில்லா சட்ட உதவி மையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

எயிட்ஸ் நேய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் டிசம்பர்- 1 உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18-ம் நாள் உலக எச்.ஐ.வி. தடுப்பூசி விழிப்புணர்வு நாள் மற்றும் எய்ட்ஸால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினம் அனுசரிக்கப்படுகிறது.

எச்.ஐ.விஃஎய்ட்ஸ் பற்றிய போதிய விழிப்புணர்வு கடைநிலை மக்களையும் சென்றடைய பொதுமக்களாகிய நாம் உறுதியேற்றால் தான், எச்.ஐ.வி ஃ எய்ட்ஸ் இல்லாத வருங்கால சமுதாயத்தை உருவாக்க முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வின் போது, இணை இயக்குநர் (மருத்துப்பணிகள்) மரு.துறைராஜ் (பொ), துணை இயக்குநர்கள் மரு.கலுசிவலிங்கம் (சுகாதாரப்பணிகள்), மரு.பழனிச்சாமி, மரு.அமுதா, கூட்டு மருந்து சிகிச்சை மருத்துவர்கள் மரு.சண்முகராஜ், மரு.தேன்மொழி, மாவட்ட மேற்பார்வையாளர் மரு.அய்யனார், செவிலியர் கல்லூரி முதல்வர் மரு.சுல்தான் அலவவுதின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்