திருப்பூர் மாவட்டத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி கலெக்டர் ச.ஜெயந்தி தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      திருப்பூர்
aa

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில்,  கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி  திருப்பூர் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி    தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ராஜீவ் காந்தி

மறைந்த  பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (21.05.2017) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி இன்று (19.05.2017) மாவட்ட ஆட்சியரகத்தில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி மாவட்ட கலெக்டர்  தலைமையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வெங்கடாசலம்(பொது),க.சு.ராதா(கணக்குகள்), கிரி(வளர்ச்சி), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: