தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      திருநெல்வேலி
tenkasi mkvk school 2017 05 19

தென்காசி எம்.கே.வி.கே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் 217 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர்.

 பாராட்டு

இதில் மாணவி சுஜா உலகஸ்ரீ மற்றும் தங்கவேல்ராஜ் 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தனர். இரண்டாவதாக மாணவி கிருஷ்ணசந்தியா 492 மதிப்பெண்கள் மற்றும் மூன்றாவதாக மாணவி ரோஷினி 491 மதிப்பெண்கள் பெற்றனர். 490 - க்கு மேல் 6 பேரும் 480 - க்கு மேல் 17 பேரும் 450 – க்கு மேல் 67 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களையும் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளி தாளாளர் பாலமுருகன் பள்ளி முதல்வர் அந்தோணி பால்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


இதை ஷேர் செய்திடுங்கள்: