கோலியின் ரசிகையாக மாறிய ஜான்டி ரோட்சின் மகள் !

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      விளையாட்டு
Jonty Rhodes daughter 0217 05 19

கேப்டவுன், தென்ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளருமான ஜான்டி ரோட்ஸின் செல்லமகள் இந்தியா இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் தீவிர ரசிகையாகி இருக்கிறாள்.

தீவிர ரசிகை

தென்ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளருமான ஜான்டி ரோட்ஸ் இந்தியா மீதுள்ள நேசத்தின் காரணமாக தனது மகளுக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்தார்.  அவரது செல்லமகள் இந்தியா இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் தீவிர ரசிகையாகி இருக்கிறாள். விராட் கோலி போஸ்டரின் பின்னணியில் தனது மகள் இந்தியா இருப்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள ரோட்ஸ், ‘விராட் கோலியின் இன்னொரு தீவிர ரசிகையை பாருங்கள். ‘இந்தியா’வை நாம் குறை சொல்ல முடியாது’ என்று கூறியுள்ளார்.


மீண்டு வரும்

அதற்கு கோலி, ‘ஆகா... என்னவொரு அழகு. ஒட்டுமொத்த அழகையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த சிறுமி தனது சிறிய பையில் என்ன எடுத்து செல்கிறாள்’ என்று குறிப்பிட்டுள்ளார். கோலி இன்னொரு பதிவில், ‘அடுத்த சீசனில் பெங்களூரு அணி வலுவான அணியாக மீண்டு வரும்’ என்று கூறியிருக்கிறார்.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: