முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவூதியில் டிரம்பிற்கு விமானம் மூலம் மலர்தூவி வரவேற்பு

சனிக்கிழமை, 20 மே 2017      உலகம்
Image Unavailable

ரியாத், சவூதி அரேபியாவுக்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ராணுவ விமானம் மூலம் மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்பை சவூதி மன்னர் கைகுலுக்கி வரவேற்றார்.

அமெரிக்க அதிபர் பதவியை ஏற்றபின்பு டிரம்ப் முதன் முதலாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவிற்கு 7 நாடுகளை சேர்ந்த முஸ்லீம்கள் வர கடும் கட்டுப்பாடுகளை விதித்த அதிபர் டிரம்ப், முதன்முதலாக முஸ்லீம் நாடான சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளார்.
ரியாத் நகருக்கு நேற்று சென்ற டிரம்பிற்கு, விமான நிலையத்தில் வந்திறங்கியபோது வானத்தில் ராணுவ விமானம் பறந்தபடி மலர்தூவி வரவேற்பு கொடுக்கப்பட்டது. 81 வயதாகும் சவூதி மன்னர் சல்மான்  நேரடியாக விமான நிலையத்திற்கு சென்று கைகுலுக்கி வரவேற்றார்.

சவூதி அரேபியாவுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்வதற்கும் அங்கு தலைதூக்கியுள்ள பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்து விவாதிப்பதற்கும் டிரம்ப் முதல் முதலாக சவூதிக்கு சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஒருவர் சவூதிக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் நாடும் சவூதிதான். சவூதியில் இரண்டு நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு இஸ்ரேலுக்கு டிரம்ப் செல்கிறார். அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமனை சந்தித்து பேசுகிறார்.

பின்னர் இஸ்ரேலில் இருந்து வாடிகன் செல்கிறார். வாடிகன் நகரில் கிறிஸ்தவ மதத்தலைவரான போப்பாண்டவர் பிரான்சிஸை சந்தித்து பேசுகிறார். பிரஸ்சல்ஸில் நடைபெறும் நேட்டோ மாநாட்டிலும் சிசிலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டிலும் கலந்துகொள்கிறார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago