முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அனல் காற்று நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

சனிக்கிழமை, 20 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, கடல்காற்று மிக தாமதமாக வீசுவதால் மாலை 6 மணி வரை வெப்பக்காற்று அனலாக கொதிக்கிறது. இந்த நிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஆந்திராவில் வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவி வருகிறது. அந்த பகுதியில் இருந்து வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி வெப்பக்காற்று வீசுவதால் பகலில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் கடுமையாக உள்ளது. ஆந்திராவையொட்டி உள்ள ஊத்துக்கோட்டை திருத்தணி, திருவள்ளூர், திருநின்றவூர், பட்டாபிராம் , ஆவடி, அம்பத்தூர் உள்பட சென்னையிலும் வெயிலின் அளவு அதிகமாகவே உள்ளது. ஆரம்பத்தில் திருத்தணியில் 115 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. அதன் பிறகு படிப்படியாக குறைந்து நேற்று 112.1 டிகிரி வெயில் அடித்தது. சென்னை விமான நிலையம், கடலூரில் 107 டிகிரியும், வேலூரில் 106 டிகிரியும் வெயில் அளவு பதிவானது. கடல்காற்று மிக தாமதமாக வீசுவதால் மாலை 6 மணி வரை வெப்பக்காற்று அனலாக கொதிக்கிறது. இந்த நிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இது பற்றி வானிலை மைய அதிகாரி கூறுகையில் கோடை கால வெப்பம் இந்த ஆண்டு அதிகம் நிலவுவதால் உள் மாவட்டங்களில் மட்டுமே அவ்வப்போது வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் மழை பெய்கிறது. சென்னையை பொறுத்தவரை 4 மாதமாக மழை இல்லாததால் வெப்பக்காற்று அதிகமாகவே காணப்படும். இந்த மாத இறுதி வரை அனல் காற்று வீசும். ஜூன் மாதத்தில் தான் ஒரு சில பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago