முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை வில்வித்தை: கொலம்பியாவை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா

சனிக்கிழமை, 20 மே 2017      விளையாட்டு
Image Unavailable

ஷாங்காய் : உலக கோப்பை வில்வித்தை தொடரின் காம்பவுண்ட் பிரிவில் இந்திய ஆண்கள் அணி கொலம்பியாவை வீழ்த்தி தங்கம் வென்றது.

இறுதி போட்டி

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் அபிஷேக் வர்மா, சின்ன ராஜூ, அமான்ஜித் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் வில்வித்தை அணி முதல் சுற்றில் வியட்நாம் அணியையும்,  காலிறுதியில் ஈரானையும், அரையிறுதியில் 232-க்கு 230 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

தங்கம் வென்றது

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி, கொலம்பியாவை எதிர்கொண்டது. இந்நிலையில், இறுதிப்போட்டியில இந்திய ஆண்கள் அணி 226-க்கு 221 என்ற புள்ளி கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியது. இறுதியில் இந்திய அணியிடம் பெற்ற தோல்வியால், கொலம்பியா வெள்ளிப்பதக்கத்தையும், அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வியுற்ற அமெரிக்கா மூன்றவாது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தையும் பெற்றன.

தீபிகாகுமாரி தோல்வி

ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் தீபிகாகுமாரி ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியைத் தழுவினார். இதே போல் மகளிர் அணியும் லீக் போட்டியில் தோல்வி முகத்துடன் வெளியேறிய நிலையில் இந்திய ஆண்கள் வில்வித்தை அணி தங்கம் வென்றது ஆறதலாக அமைந்துள்ளது.

கொரியாவுக்கு தங்கம்

பெண்கள் அணி பிரிவில் இந்திய காலிறுதி வரை முன்னேறியது. காலிறுதியில் டென்மார்க் அணியிடம் 223-229 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. இப்பிரிவில் கொரியா தங்கம் வென்றது. டென்மார்க் வெள்ளியும், ரஷ்யா வெண்கலமும் வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்