முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

சனிக்கிழமை, 20 மே 2017      விளையாட்டு
Image Unavailable

ரோம் : இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி வெற்றி பெற்றது. ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

நேர் செட்டில் ...

பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷிவ்டோவா ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்டில் இத்தாலியின் சாரா எர்ரானி - மார்ட்டினா டிரெவிசான் இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

சிமோனா வெற்றி

சானியா கூட்டணி அடுத்து மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)- யங் ஜான் சான் (சீனத்தைபே) ஜோடியுடன் மோத இருக்கிறது. ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) தன்னை எதிர்த்த தகுதி நிலை வீராங்கனை அனெட் கோன்டாவெயிட்டை (எஸ்தோனியா) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

நடால் தோல்வி

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம்மை எதிர்கொண்டார். 1 மணி 51 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் டொமினிக் திம் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் நடாலை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இதன் மூலம் களிமண் தரை போட்டிகளில் தொடர்ச்சியாக 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த நடாலின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது.

மற்ற கால்இறுதி ஆட்டங்களில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 7-6 (4), 6-1 என்ற செட் கணக்கில் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கையும், ஜான் இஸ்னெர் (அமெரிக்கா) 7-6 (3), 2-6, 7-6 (2) என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சையும் விரட்டியடித்து அரைஇறுதியை எட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்