முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் ரூ.6.73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மு.கருணாகரன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி  (1426 ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி) திருநெல்வேலி கலெக்டர் மற்றும் செங்கோட்டை வட்ட வருவாய் தீர்வாய அலுவலர்  மு.கருணாகரன், தலைமையில் நடைபெற்றது.

 லத்திட்ட உதவிகள்

நிகழ்ச்சியில் இலந்தூர் குறு வட்டத்தை சேர்ந்த நெடுவயல், இலந்தூர், குன்னக்குடி, பிரானூர், வல்லம் ஆகிய கிராம கணக்குகளை கலெக்டர்  பார்வையிட்டார். மேலும் இப்பகுதி மக்களிடம் பட்டா மாறுதல் தனி பட்டா மற்றும் கூட்டு பட்டா மற்றும் நில அளவை செய்தல் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து வருவாய்த்துறையின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் திருமண உதவித்தொகை 10 நபர்களுக்கும் மொத்தம் 90 ஆயிரம் மதிப்பிலும், இயற்கை மரண உதவித்தொகை 6 நபர்களுக்கு ரூ.72,500 மதிப்பிலும், விபத்து உதவித்தொகை 5 நபர்களுக்கு ரூ.5.10 லட்சம் மதிப்பிலான காசோலைகளை கலெக்டர்  வழங்கினார். மேலும் 25 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் இதர உதவித்தொகைகள் என மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.6,72,500 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இக்கூட்டத்தில் கலெக்டர்  தெரிவித்ததாவது:-

ஜமாபந்தி நிகழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டத்தில் 1426 ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அனைத்து பட்டாதாரர்களும் நில ஆவணங்களில் தங்களது பெயரில் பதிவு உள்ளதா என சரிபாத்துக் கொள்ள வேண்டும்.

பயனடையலாம்

மேலும் பட்டா மாறுதல் செய்தவர்கள் தனிப்பட்டா பெற விரும்புவோர் மனு செய்து உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் பொதுவான கோரிக்கை மனுக்களும் பெற்று தீர்வு செய்யப்படவுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் பல்வேறு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

பலர் பங்கேற்பு

ஜமாபந்தி நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் கனகராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்திராணி, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் தேவர்பிரான், செங்கோட்டை வட்டாட்சியர் மோகன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் குழந்தை சாமி, கோட்ட கலால் அலுவலர் நடராஜன், மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்