கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      கடலூர்

கடலூர் மாவட்டம், கடலுர் கலெக்டர்அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் கோ.விஜயா அவர்கள் தலைமையில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

 உறுதிமொழி

அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கை உடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம்.  எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்துப் போராடவும், நாம் உறுதி கூறுகிறோம் என்று  உறுதி மொழி ஏற்கப்பட்டதுஇந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் ( பொது ), மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(வளர்ச்சி), மாகலெக்டர்அலுவலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: