முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொத்தரை கிராமத்தில் தொழிலாளர்களுடன் தடுப்பணை கட்டும் பணியில்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பொத்தரை கிராமத்தில் 100 நாள் தொழிலாளர்களிடம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே இணைந்து தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டார்.

 தடுப்பணை கட்டும் பணி

பொத்தரை கிராமத்தில் உள்ள பெரியஏரி நீர்வரத்து கால்வாயின் குறுக்கே தேசிய ஊரக உறுதி திட்டத்தின்கீழ் ரூ. 92 ஆயிரம் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கியது. இந்த பணியில் 16 பெண்கள் உள்பட 25க்கும் மேற்பட்ட 100 நாள் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அங்கு தி.மலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே சக அதிகாரிகளுடன் வந்தார். 100 நாள் தொழிலாளர்களுடன் இணைந்து மண் அள்ளியும் கற்களை சுமந்தும் தடுப்பணை கட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சுமார் 3 மணிநேரம் வியர்வை சொட்ட சொட்ட பணியில் ஈடுபட்ட ஆட்சியரை அக்கிராம மக்கள் ஆச்சரியமாக பார்த்து வியந்ததோடு அவரை பாராட்டினர்.

மேலும் ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களும் அங்கு வேடிக்கை பார்த்து வந்தனர். கிராம பொதுமக்களும் கட்டுமான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அப்போது கலெக்டர் பேசும்போது இதுபோன்ற தடுப்பணை அமைக்கும் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் குடிநீர் பிரச்சனை ஏற்படாது. இதனை கூலி வேலையாக நினைக்காமல் கடமையாக நினைத்து செயலாற்ற வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நான் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஒரு கிராமத்தில் இதுபோன்ற உடல்உழைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றேன் என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்