விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்கும் பணி :அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி கிராமத்தில் உள்ள ஏரி, குளங்களில் விவசாய நிலங்களுக்குத் தேவைப்படும் வண்டல் மண் எடுக்கும் பணியை  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  தொடங்கி வைத்தார். வண்டல் மண் எடுக்கும் பணியினை தொடங்கி வைத்து,  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  தெரிவித்ததாவது:

 பல்வேறு திட்டங்கள்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசையுடன்,  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் தலைமையில், தமிழகத்தை முன்னேற்றும் வகையில் இவ்வரசு நல்லமுறையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

அரசு முடிவு

மிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தவறியதால் இதுவரை இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுகிறது.  இந்த வறட்சியினால் ஏற்படும், குடிநீர் பிரச்சனையை தீர்க்கவும், நீர் ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி இவ்வறட்சியினை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதற்காக மழைநீரை சேமித்தல், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தி, ஒழுங்குபடுத்த, நீர்நிலைகளை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

ரூ.100 கோடி ஒதுக்கீடு

இத்திட்டத்தின் முதல் கட்டமாக பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்க பண்டைய “குடிமராமத்து” திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, முதல் கட்டமாக அனைத்து மாவட்டத்திற்கும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 101 ஏரிகளில், ரூ.808 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

மண் எடுக்க அனுமதி

விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு விவசாய நிலங்களை செம்மைப் படுத்த தங்கள் கிராமம் அல்லது அருகாமையில் உள்ள கிராமங்களில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் மற்றும் அணைகளை தூர்வாரி, தூர்வாறும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசினால் ஆணையிடப்பட்டுள்ளது.அதன்படி, நஞ்சை நிலம் ஏக்கர் ஒன்றிற்கு 75 கனமீட்டரும் (25 டிராக்டர் லோடுகள்), புஞ்சை நிலம் ஏக்கர் ஒன்றிற்கு 90 கனமீட்டரும் (30 டிராக்டர் லோடுகள்), வீட்டு பயன்பாட்டிற்கு 30 கனமீட்டரும் (10 டிராக்டர் லோடுகள்), மண்பாண்டல் தொழில் செய்பவர்களுக்கு 20 கனமீட்டலும் (20 டிராக்டர் லோடுகள்) அளவிற்கு வண்டல் மண் மற்றும் சவுடு மண்ணினை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.  விவசாய நிலங்களுக்கு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இலவசமாக வண்டல் மண் பெற்றுக்கொள்ளலாம்.

2500 ஏரி குளங்கள்

மேலும்,  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஏரி, குளங்களை தூர்வார ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட்டுள்ளார்கள்.  இதன் மூலம், 2500 ஏரி குளங்கள் தூர்வாரப்பட உள்ளது என  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  தெரிவித்துள்ளார்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் செஞ்சிசேவல் வெ.ஏழுமலை, வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்கரபாணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்பாசனம்) சண்முகம், உதவி பொறியாளர் ஞானசேகர், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு, விழுப்புரம் வட்டாட்சியர் பத்மா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்: