முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசிபுரம் நகராட்சியில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் ரூ.19.50 லட்சம் மதிப்பீட்டில் 5 புதிய குடிநீர் திட்டப்பணிகள்: அமைச்சர்கள் தங்கமணி வி.சரோஜா தொடங்கி வைத்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராசிபுரம் நகராட்சியில் உள்ள 7 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட குடிநீர்திட்டப்பணிகள் திறப்பு விழாவும், புதியதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு விழாவும் இன்று (21.05.2017) நடைபெற்றது. இவ்விழாக்களுக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். இவ்விழாக்களில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு புதிய குடிநீர் திட்டப்பணிகளையும், புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களையும் திறந்து வைத்தார்கள்.

திறப்பு விழா

இராசிபுரம் நகராட்சி வார்டு எண்.1-க்குட்பட்ட போலீஸ் காலனியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும், மற்றும் வார்டு எண்.10-க்குட்பட்ட வி.நகர் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும் என மொத்தம் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 2 புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களையும், வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் வார்டு எண்.7-க்குட்பட்ட இ.பி.காலனி, இராமசாமி தோட்டம், வார்டு எண்.8-க்குட்பட்ட பிற்பட்டோர்காலனி, வார்டு எண்.10-க்குட்பட்ட வி.நகர் சாலை மற்றும் வார்டு எண்.20க்குட்பட்ட கோனேரிப்பட்டி ஏரிகடைக்கால் பகுதி ஆகிய இடங்களில் தலா ரூ.4.00 இலட்சம் வீதம் ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் 4 ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தப்பட்ட குடிநீர் தொட்டிகளையும், வார்டு எண்.23-க்குட்பட்ட நகர சுத்தி தொழிலாளர் காலனியில் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தப்பட்ட குடிநீர் தொட்டியினையும் என மொத்தம் வறட்சி நிவாரண திட்டம் 2017-18-ன் கீழ் ரூ.19.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 5 குடிநீர் திட்டப்பணிகளையும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ம.இராஜசேகரன், இராசிபுரம் நகராட்சி ஆணையர் பி.கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி பொறியாளர் பி.நடேசன், இராசிபுரம் வருவாய் வட்டாட்சியர் இரத்தினம், சேலம்-நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த ஆவின் தலைவர் சின்னுசாமி, இராசிபுரம் முன்னாள் நகரமன்றத்தலைவர் எம்.பாலசுப்ரமணியன், ஆர்.சி.எம்.எஸ் தலைவர் எஸ்.பி.தாமோதரன், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஈ.கே.பொன்னுசாமி, கோ-ஆப்-டெக்ஸ் நிர்வாக இயக்குனர் சி.கலைவாணி உட்பட கூட்டுறவாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்