முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறட்சி காரணமாக ஊராட்;சிகளில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் பணிகள் குறித்து, நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை, அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, மத்தூர், சூளகிரி மற்றும் ஓசூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், வறட்சியின் காரணமாக ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் பணிகள் குறித்து நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை நேற்று (21.05.2017) அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி , கலெக்டர் சி.கதிரவன் , பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடிநீர் பணிகள்

இவ்வாய்வின் போது நடாளுமன்ற துணை சபாநாயகர் உரையாற்றும் போது:மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா நல் ஆசியுடன் , தமிழக முதலைமைச்சர் இடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெறும் தமிழக அரசு வறட்சி நிவராண பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தற்போது தமிழகத்தில் 140 வருடத்தில் இல்லாத வறட்சி தற்போது நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது. மறைந்த அம்மா அவர்களின் தொலைநோக்கு சிந்தனையால் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றபட்டு பொதுமக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் குடிநீர் பிரச்சனை மற்றும் விவசாய பாசனத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2005 ஆண்டு அம்மா அவர்களுடைய அரசு கிருஷ்ணகிரி பெரிய ஏரியிலிருந்து (படேதால்வாய்) கால்வாய் அமைத்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு வினியோகம் செய்ய ரூ.8 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பருவ மழை பொய்ததின் காரணமாக பெரிய ஏரிக்கு நீர் வரத்து இல்லாமல் போனது. இந்நிலையில் ரூ.300 கோடி ரூபாய் அளவிற்கு திட்ட மதிப்பீடு செய்து தென்பெண்ணை ஆறு எண்ணேக்கோல் பகுதியிலிருந்து, கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கு தண்ணீரை கொண்டு வந்து அந்த தண்ணீர் பர்கூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள இணைப்பு கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி முதல் ஊத்தங்கரை வழியாக புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இக்கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தில் கருத்துரு பெற்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில்; சாலை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.

தொடர்ந்து சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலம் மற்றும் ஓசூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்ட நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது, புதிய குடிநீர் பைப்லைன் அமைக்கப்பட்டது, புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது மற்றும் புதிய மின் மோட்டார் அமைக்கப்பட்டது குறித்து ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் பணிகளை தடையின்றி அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். பருவமழைக்கு முன்பு ஏரிகரைகளை பலப்படுத்துவதோடு அந்த கரைகள் தண்ணீர் அரிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்க நடைவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் ஓசூர் நகர மக்கள் தொகை அதிகரிப்பு, நிறுவனங்கள் பணிபுரியும் ஊழியர்கள் பணிக்கு சென்று வர ஓசூர் நகரை சுற்றி உள்ள சாலைகள் அகலப்படுத்தப்பட்டு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். ஓசூர் நகருக்கு ரூ. 100 கோடி மதிப்பில் குடிதண்ணீர் பிரச்சனை, அனைத்து பகுதிகளுக்கு ஓரே சீரான வகையில் கிடைக்க சம அளவில் குடிநீர் குழாய்கள் அமைத்து தரப்படும். ஓசூர்நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஓசூர் நகர மக்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் , கலெக்டர் ஆகியோர் அரசுக்கு கருத்துரு அனுப்பி நல்ல முறையில் திட்ட பணிகள் செயல்படுத்தப்படும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, ஓசூர் சார் கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நரசிம்மன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் முத்துசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரிய செயற்பொறியாளர் சுகுமாரன், உதவி செயற்பொறியாளர்கள் சேகர், பன்னீர் செல்வம், உதவி இயக்குநர் ( ஊராட்சிகள்) லட்சுமணன், தருமபுரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் எஸ்.தென்னரசு, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.என்.ஏ. கேசவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கோவிந்தராஜ், முனிவெங்கடப்பன், கே.இ.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் ஆர்.ஜெயபால், மது (எ) ஹேம்நாத், முனியப்பன், மாநில நில வள வங்கி தலைவர் சாகுல்அமீது, கூட்டுறவு சங்க தலைவர்கள் தேவேந்திரன், வி.டி. ஜெயராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரபாஸ்கர், அன்னபூரணி, சென்னகிருஷ்ணன், சாந்தி, ராஜசேகர், அசோகன் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்