முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாமிரபரணி ஆற்றுடன் கருமேனியாறு நம்பியாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு கருத்துக் கேட்புக் கூட்டம் கலெக்டர் மு.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி எப்எக்ஸ் பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சார்பில் தாமிரபரணி ஆற்றுடன் கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளை இணைத்தும் திட்டத்திற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்களுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் கலெக்டர்  மு.கருணாகரன்  தலைமையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பத்துறை  முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கலெக்டர்  பேசியதாவது:-

 ரூ.872 கோடி திட்ட மதிப்பீடு

தாமிரபரணி ஆற்றுடன் கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்கு தற்போது ரூ.872 கோடி திருத்திய திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு 4 கட்டங்களாக பணிகள் திட்டமிடப்பட்டு 1, 2 ம் கட்டப் பணிகள் விவசாயிகளின் மேலான ஒத்துழைப்புடன் முடிக்கப்பட்டுள்ளது. மூலக்கரைப்பட்டி முதல் கருமேனியாறு தடுப்பணை வரை 90 சதவீத பணிகள் முடிவு ரூ.700 கோடி நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கும், ரூ.100 கோடி கால்வாய் பணிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நடவடிக்கை

கால்வாய் பணிகளுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு 150 சதவீதம் வழங்கும் திட்டமுள்ளது. மத்திய அரசு 400 சதவீதம் வரை உயர்த்தி வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளது. அதற்கான உத்தரவு இன்றும் பெறப்படவில்லை. இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர்  இத்திட்டத்திற்கு தமிழக அரசு உயர்த்தி வழங்கிடும் உத்தரவினை பெற்றுத் தர வேண்டும். நிலம் வழங்கும் நில உரிமையாளர்களின் சிறமங்களை முழுவதும் உணர்ந்துள்ளோம் நிலத்தை அரசு எடுப்பதால் வாழ்வாதாரம் சுருங்கி விடுவதாக இங்கு விவசாயிகள் கருத்து தெரிவித்தனர். திட்டம் நிறைவு பெற்றதும் இப்பகுதி வளமான பகுதியாக மாறும் விவசாயிகளுக்கு போதிய இழப்பீட்டுத் தொகை நியாயமான முறையில் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் நல்ல தீர்வு

ஒரு சில விவசாயிகள் நில ஆவணங்களின் பெயர் மாற்றம் காரணமாக இழப்பீடு வழங்குவதில் சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியர் மூலம் தக்க திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 மற்றும் 4 ம் கட்ட பணிகள் முழுமையாக முடித்திட நில உரிமையாளர்கள் இசைவுக் கடிதங்களை வழங்கிட வேண்டும். திட்டத்தினை முடித்து பயன்கள் முழுமையாக பொது மக்களுக்கு சென்றடைய விரைந்து பணிகளை முடிக்க அனைத்து விவசாயிகளும் முழு ஒத்துழைப்பளிக்க வேண்டும். நில உரிமையாளர்களுக்கு 400 சதவிதம் இழப்பீடு வழங்கிட அரசுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் நல்ல தீர்வு பெறப்படும். என பேசினார்.

பலர் பங்கேற்பு

இக்கூட்த்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் மைதிலி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறியாளர் ஆசைத்தம்பி, சிறப்புத் திட்ட கோட்ட செயற்பொறியாளர்கள் (நாங்குநேரி) ஞானசேகரன், (திருநெல்வேலி) ராமச்சந்திரன், (வள்ளியூர்) அப்பாத்துரை, (அம்பாசமுத்திரம்) விஜயகுமார், நதி நீர் இணைப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் மகேஷ்வரன், பாளையங்கோட்டை வட்டாட்சியர் தங்கராஜ் மற்றும் நில உரிமையாளர்கள் அலுவலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்