முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10ம் வகுப்பு தேர்வு: இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      திருநெல்வேலி
Image Unavailable

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அபிசினேகா மற்றும் பிரியதர்ஷினி 496/500 மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்தனர்.

 சாதனை படைத்த மாணவிகள்

அபிசினேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் தமிழ் 99 ஆங்கிலம் 98 கணிதம் 100 அறிவியல் 99 சமூகஅறிவியல் 100. மாணவி பிரியதர்ஷினி பெற்ற மதிப்பெண்கள் தமிழ் 98 ஆங்கிலம் 98 கணிதம் 100 அறிவியல் 100 சமூகஅறிவியல் 100. மாணவி அஜிபா ஹவ்வா 494/500 மதிப்பெண்கள் பெற்றுச் சாதனைப் படைத்தார். அவர் பெற்ற மதிப்பெண்கள் தமிழ் 98, ஆங்கிலம் 97, கணிதம் 99, அறிவியல் 100, சமூக அறிவியல் 100. ஹரிணி, பாத்திமா, முருகலட்சுமி, அஜிமா, சிவமீனாட்சி, சுபிக்ஷா, வருண்ராஜ் உள்ளிட்ட ஏழு மாணவ-மாணவிகள் 493/500 மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்தனர்.

பாராட்டு

மாணவர்கள் 133, மாணவியர் 89 பேர் உட்பட மொத்தம் 222 மாணவ மாணவியர் தேர்வெழுதினர். தேர்வெழுதிய அனைவரும்; முதல் வகுப்பில் முழுத்தேர்ச்சி பெற்றனர். கணிதத்தில் 18 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்களும், அறிவியலில் 22 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்களும், சமூகஅறிவியலில் 59 மாணவர்கள் 100-க்கு 100 மதிபெண்களும் பெற்றுச் சாதனை படைத்தனர். தமிழில் இருவர் 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 7 பேர் 99 மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்தனர். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாவியரையும் பாரத் கல்விக்குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், முதல்வர் உஷா ரமேஷ் பெற்றோர் ஆசிரியர்கள் பாராட்டினர்.11-ஆம் வகுப்பிற்கான சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 08.06.2017 அன்று 11-ஆம் வகுப்பிற்கான வகுப்புகள் தொடங்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago