அதிமுக அம்மா அணி சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      விழுப்புரம்
senji mgr 100th birthday celebrations

செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்டம்  அதிமுக அம்மா அணி சார்பில் எம்ஜிஆர். நூற்றாண்டு பிறந்தநாள் வி்ழா சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

 நலத்திட்ட உதவிகள்

கூட்டத்திற்கு செஞ்சி ஒன்றிய அதிமுக அம்மா ஒன்றிய செயலர் அ.கோவிந்தசாமி தலைமை வகித்தார். ஆரணி எம்பி.செஞ்சி வெ.ஏழுமலை, முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சிராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ பேராசிரியர் தீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சட்டம், நீதிமனறங்கள் மற்றும் சிறைத்துறைகள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஏழைகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் கு.கண்ணன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலர் அ.கெளதம்சாகர், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் வெங்கடேசன், சின்னையாவீரப்பன், ஆர்.அனுகுமார், மாவட்ட மகளிர் அணி மல்லிகாகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெகதீசன், அனந்தபுரம் நகர செயலர் அரிராமன், ஜெ.கமலக்கண்ணன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்: