முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை - வடகொரியா மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      உலகம்
Image Unavailable

சியோல் : எங்களுக்கும் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கும் எந்தஒரு தொடர்பும் கிடையாது என வடகொரியா மறுப்பு தெரிவித்து உள்ளது.

வைரஸ் தாக்குதல்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல்களை நடத்துகிற ஆற்றல் வாய்ந்த டூல்களை (கருவிகளை) கொண்டு, இந்தியா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ஊடுருவி ‘வான்னா கிரை’ என்ற வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இ-மெயில் மூலம் பரவுவதாகக் கூறப்படும் இந்த வைரஸ், உலகமெங்கும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகளை தாக்கியுள்ளது.

வடகொரியாவுக்கு ...

இந்த வைரஸ்சின் புதிய பதிப்புகளைக் கொண்டு ‘ஹேக்கர்கள்’ (சட்டவிரோதமாக கணினிகளில் ஊடுருவுகிறவர்கள்) தாக்குதல்கள் நடத்தாமல் தடுக்க உலகளாவிய அதிகார வர்க்கத்தினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில், ‘வான்னா கிரை’ வைரஸ் தாக்குதலில் வடகொரியாவுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரத்தை இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கண்டுபிடிப்பு

இந்த ‘வான்னா கிரை வைரஸ்’சின் முதல் பதிப்பின் சில குறியீடுகள், வடகொரியாவின் லாசரஸ் குரூப் ‘புரோகிராம்’களில் காணப்பட்டதாக சிமான்டெக் மற்றும் காஸ்பர்ஸ்கை இணைய பாதுகாப்பு நிறுவனங்கள் கண்டறிந்தன. இதேபோன்று தென்கொரியாவின் ஹாரி லேப்ஸ் நிறுவனமும் கண்டறிந்துள்ளது. இந்த நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் சைமன் சோய் இதுபற்றி குறிப்பிடுகையில், “இது (வான்னா கிரை வைரஸ்), வடகொரியாவின் தீங்கு இழைக்கும் குறியீடுகளைப்போன்றே உள்ளது” என கூறி உள்ளார்.

திட்டவட்ட மறுப்பு

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை வடகொரியா திட்டவட்டமாக மறுத்து உள்ளது. உலகில் எங்கு எந்த பிரச்சனை நடந்தாலும் வடகொரியாவை இழுத்து விடுவது கேலிக்குறியதாக உள்ளது என ஐக்கிய நாடுகளுக்கான வடகொரியாவின் துணைத்தூதர் கிம் இன் யோன் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago