முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-வது ஐ.பி.எல். சீசன்: 7-வது முறை இறுதிப் போட்டியில் களமிறங்கிய டோனி

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு : ஐ.பி.எல். தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 10 சீசனில் 7-வது முறையாக இறுதிப் போட்டியில் களம் இறங்கி உள்ளார்.

கேப்டனாக ...

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இந்திய பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) டி20 கிரிகெட் தொடர் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தொடரில் இருந்தே இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்த டோனி தொடர்ந்து 2016-ம் ஆண்டு வரை கேப்டனாக இருந்தார்.

2008-ல் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவற விட்டது. 2009-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை.

முதன் முறையாக ...

2010-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.
2011-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
2012-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியடைந்து ஹாட்ரிட் சாதனையை தவறவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
2013-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
2014-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை.
2015-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.
2016-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. 2008 முதல் 2016 வரை 9 சீசனுக்கு ஐ.பி.எல். அணியின் கேப்டனாக டோனி பணியாற்றியுள்ளார். இதில் 2009, 2014 மற்றும் 2016-ம் ஆண்டு மட்டுமே டோனி தலைமையிலான அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. மற்ற 6 முறை முன்னேறியுள்ளது.

தற்போது டோனி இடம்பிடித்துள்ள அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் டோனி கேப்டனாக இல்லை. என்றாலும் 10 சீசனில் 7-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடி  உள்ளார் டோனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago