செங்குன்றத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மின்விசிறிகளை எம்எல்ஏ .சுதர்சனம் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      சென்னை

மாதவரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ. எஸ்.சுதர்சனம். மாதவரம் தொகுதியில் உள்ள மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். நாரவாரிகுப்பம் (செங்குன்றம்) பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். முதியோர் உதவி தொகை, குடிநீர் தட்டுப்பாடு, மின்சார தடை, உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் அவருடன் மனுக்களாக அளித்தனர். உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதையடுத்து, செங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சமூக தொண்டு நிறுவனம் சார்பில் 14 மின் விசிறிகளை எம்எல்ஏ. சுதர்சனம் வழங்கினார். இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் என்எம்.துரைசாமி, ஜி.ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் ஏ.பாபு, தொண்டு நிறுவன நிர்வாகிகள் சிவக்குமார், கே.டி.எஸ்.சீனிவாசன்,  சமூக ஆர்வலர்கள் க.கு.இலக்கியன், திராவிடமணி ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஜோஸ்பின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: