முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் எம்.மணிகண்டன் பணி நியமன ஆணை வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமன ஆணைகளை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.

ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக ஊரக பகுதி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவக்கி வைத்து தேர்வு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில், ஊரக பகுதிகளில் உள்ள 10, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் படிப்பு படித்து முடித்த இளைஞர்கள் தங்களது படிப்பு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை பெற்று பயனடைந்திடும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், ராமநாதபுரம், சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்றைய தினம் ஊரக பகுதி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.  இம்முகாமில், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஆகிய நகரங்களிலிருந்து  13  தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.

இம்முகாமில் ஏறத்தாழ 250-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.  கட்டுமான பணி, நூற்பாலை பணி, கணினி இயக்கும் பணி, ஓட்டுநர் பயிற்சி, பிளாஸ்டிக் தொழிற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மற்றும் பயிற்சிகளுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தனியார் காப்பீடு நிறுவனங்களும் கலந்துகொண்டு தகுதியான இளைஞர்களை தங்களது நிறுவனங்களின் பணிபுரிய தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.   இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் எம்.ஜெயராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் ராஜா முகமது, இராம்லால், சரவணப்பாண்டியன், குருசாமி உட்பட அரசு அலுவலர்கள், பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்