முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாய நிலங்களை மேம்படுத்த பொதுமக்கள் மண் படிவுகளை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் : அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      புதுக்கோட்டை
Image Unavailable

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் இடையப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஏரிலிருந்து பொதுமக்களின் பல்வேறு பயன்பாட்டிற்கு இலவசமாக மண் எடுப்பதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சு.கணேஷ். தலைமையில் இடையப்பட்டி அய்யனார் கோவில் ஏரிக்கரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மண் எடுப்பதற்கான ஆணை வழங்கி பேசியதாவது.

ஆணை

தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர் அம்மா கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தின் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பொதுப்பணி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைகளின் பராமரிப்பில் உள்ள நீர்நிலைகளான கண்மாய், குளம், ஏரி, வாய்க்கால் ஆகியவற்றில் படிந்துள்ள வண்டல்,சவுடு, களி மற்றும் கிராவல் மண் படிவுகளை பொதுமக்கள் விவாசய நிலங்களை மேம்படுத்துதல், மண்பாண்டங்கள் செய்தல்,சொந்த வீட்டு உபயோகம் உள்பட பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்திகொள்ளாம் என ஆணை பிறப்பித்ததின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் இடையப்பட்டி ஏரியில் இருந்து இலவசமாக மண் எடுப்பதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அரசு அளித்துள்ள விதிகளின் படி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து வட்டாட்சியர்களின் முறையான அனுமதி பெற்று மேற்குறிபிட்ட மண் வகைகளை விலை இல்லாமல் பெற்று கொள்ளாலாம். மேலும் அரசு ஆணை படி வழங்கும் அனுமதியை தவறாக பயன்படுத்தி பட்டா நிலங்களில் உள்ள கனிமங்களை வெட்டி எடுத்து செல்லக் கூடாது. அனுமதிதாரர் சம்மந்தப்பட்ட நீர்நிலை கட்டுபாட்டுத்துறை அலுவலரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மண்அள்ளும் எந்திரம் மட்டுமே உரிய ஏற்றுக்கூலி செலுத்தி மண் படிவங்களை வானங்களில் ஏற்றி செல்ல வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே நேரம் நிர்ணைக்கப்பட்டுள்ளது.

மண் படிவங்கள் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படும் நீர்நிலைகளிலிருந்து எடுக்கப்படும் மண்னானது பயனாளிகள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள விவசாய நிலங்கள் மற்றும் சொந்த உபயோகத்திற்கு மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். எனவே பொதுமக்கள் எவ்வித வியபார நோக்கில் இல்லாமல் முறையாக மண்படிவுகளை பயன்படுத்தி கொள்ளள வேண்டும் என கேட்டுகொள்கிறேன். இவ்வாறு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் வடிவேல் பிரபு, அன்னவாசல் கூட்டுறவு சங்க தலைவர் ராமசாமி, அட்மா குழுத்தலைவர் சாம்பசிவம், இலுப்பூர் வட்டாட்சியர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்