முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 17 பேர் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை மாவட்டம், வியாசர்பாடி, பக்தவச்சலம் காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் ரகுபதி,சென்னை மாவட்டம், மந்தைவெளிப்பாக்கத்தைச் சேர்ந்த துளசி கிராமணி என்பவரின் மகன் சுப்பிரமணி,

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், சத்திரமனை ஊராட்சியைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் நல்லேந்திரன், கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், தர்மபுரம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அவருடைய மனைவி பபிதா,விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், காளையார் கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி ஆதிலெட்சுமி,திருச்சி மாவட்டம், முதலியார்சத்திரம் நடுத்தெருவைச் சேர்ந்த சிங்கராஜ் என்பவரின் மகன் ஜலந்தர், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், திருக்களார் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையன் என்பவரின் மகன் திருஞானம், புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், இச்சடி முக்கானிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சவரிமுத்து என்பவரின் மகள் சிறுமி எஸ்தர், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், செடுத்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவரின் மகன் தங்கராசு, சேலம் மாவட்டம், பெரியேரி கிராமத்தைச் சேர்ந்த ஆர். யோகேஸ்வரன், சென்னை மாவட்டம், அயனாவரம் வட்டம், பெரவள்ளூர், வெற்றி நகரைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவரின் மகன் செல்வன் கௌதம்; திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை என்பவரின் மகன் மருதபிள்ளை  ஆகியோர் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும், கடலூர் மாவட்டம், புதுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகன் ஆறுமுகம் என்பவர் மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்தபோது, படகு கவிழ்ந்து, கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் வட்டம், கத்திவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜூ என்பவரின் மகன்பாலு என்பவர் கடலில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் கிராமம், சம்பா தோட்டத்தைச் சேர்ந்த தம்பிராஜ் என்பவரின் மகன் மாரியப்பன் மற்றும் வேதாரண்யம் வட்டம், வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் மகாலிங்கம் ஆகிய இருவரும் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 17 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்