முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆழியாறு அணையில் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் பணி சட்டப்பேரவைத்துணை தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மாவட்டம் ஆழியாறு அணையில் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் பணியினை துவக்கி வைத்து தமிழகத்தில் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான ஆழியாறு அணையில் தூர்வாரும் பணி இங்குதான் முதன்முதலாக நடைபெறுகிறது  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ,  சட்டப்பேரவைத்துணை தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன்  ஆகியோர் தகவல் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு அணையில் பொதுப்பணித்துறையின் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல்மண் வழங்குதல் மற்றும் தூர்வாறும் பணி துவக்கவிழா நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ,  சட்டப்பேரவைத்துணை தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன்  ஆகியோர் ஆழியாறு அணை தூர்வாறும் பணியினை துவக்கி வைத்து விவசாயிகளுக்கு வண்டல்மண் வழங்கும் பணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தெரிவிக்கையில், 

தார்வாறும் பணி 

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசை சிறப்போடு செயல்படுத்தி வரும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, குளங்கள் தூர்வாறும் பணி நடைபெற்று வருவதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் பெரிய ஆறுகளாக திகழ்ந்து வரும் ஆழியாறு அமராவதி ஆறு, திருமூர்த்தி ஆறு ஆகியவற்றில் தூர்வாரி அதில் உள்ள வண்டல் மண்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கிட உத்தரவிட்டு தமிழகத்தில் முதன்முதலாக கோயம்புத்தூர் ஆழியாறு இன்று தூர்வாறும் பணி மற்றும் வண்டலமண் விவசாயிகளுக்கு வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் மழைகாலத்தில் இந்த அணையில் கூடுதலாக அரை டி.எம்.சி. தண்ணீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. இதுமட்டுமின்றி இங்கிருந்து எடுக்கப்படும் வண்டல் மண் உரத்தண்மை வாய்ந்ததாகும், இதை விவசாயிகளுக்கு விளை நிலங்களில் பயன்படுத்தும்போது அதிக மகசூல் பெற பயனுள்ளதாக இருக்கும். இதுபோல் மற்ற ஆறு குளம், ஏரிகளிலும் இப்பணி நடைபெற்று வருகிறது.பொதுவாக 142 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சி தற்போது ஏற்பட்டுள்ளதால் அதை சரிசெய்ய  அம்மா அவர்களின் அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் முதற்கட்டமாக  தமிழ்நாடு முதலமைச்சர்  ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து குடிமராமத்து பணியினை துவக்கி வைத்ததுடன் மேலும், நடப்பாண்டிற்கு ரூ.300 கோடி நிதியொதுக்கீடு செய்து அனைத்துப்பகுதிகளிலும் குடிமராமத்துப்பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும், தமிழக அரசு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆறு ஏரி குளங்களை சீர் செய்து வருகின்றன. இதன் மூலம் எதிர்களாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது மட்டுமின்ற விவசாயிகளுக்கும் போதிய அளவு தண்ணீர் தேக்கி விவசாயப் பணிகள் மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும், அந்த வகையில் தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி தொலைநோக்கு சிந்தனையோடு பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விவசாயிகளுக்கு பனுள்ளதாக

தமிழகத்தில் உள்ள எதிர்கட்சியைச் சேர்ந்த தலைவர் விளம்பரத்தை தேடிக்கொள்ளும் வகையில் சீர் செய்யப்பட்ட கோயில் குளத்தில் கட்சிப் பிரமுகர்களுடன் விளம்பரம் தேடிக்கொள்ள தூர்வாரும் பணியை மேற்கொள்ளுவதுபோல் விளம்பரப்படுத்தி வருகின்றார். அவர் உண்மையிலேயே குளங்களை தூர்வார நினைத்தால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏராளமான குளங்கள் ஏரிகள் உள்ளன. இங்குவந்து தூர்வாரினால் நன்றாக இருக்கும். விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசைப் பொருத்தவரை யாரும் விளம்பரத்தை தேடி வேலை செய்யவில்லை. ஓவ்வொறு பணியும், பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே   அம்மா அவர்களின் அரசு செயல்பட்டு வருகின்றது. இது மக்களுக்கும் நன்றாக தெரியும், தொடர்ந்து பொதுமக்களின் நலனுக்காகNவு இந்த அரசு பாடுபடும் என  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தெரிவித்தார்.

இந்நிக்கழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, மாவட்ட  வருவாய் துரைரவிச்சந்திரன், பொள்ளாச்சி சார் கலெக்டர் காயத்ரி கிருஷணன்  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், கோவை மண்டல ஆழியாறு தலைமை பொறியாளர் வெங்கடாச்சலம், கண்கானிப்பு பொறியாளர் காமராஜ், பரம்பிக்குளம் கோட்டம் செயற்பொறியாளர் கிருஷ்ணன், உதவி செயற்பபொறியாளர் மாணிக்க வேல், நரேந்திரன், இராதகண்ணன், முருகேசன், பொள்ளாச்சி வட்டாட்சியர் செல்வி மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்