முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் பொது மக்கள் அதிகம் கண்டு ரசிக்கும் வாத்து பிடிக்கும் போட்டி ,படகு போட்டிகள்

திங்கட்கிழமை, 22 மே 2017      திண்டுக்கல்
Image Unavailable

 கொடைக்கானல்--கொடைக்கானலில் இரண்டு நாட்களாக நடந்த படகுப் போட்டிகளில் ஆதித்ய துரைராஜா, மின்தமி ஆயியோர் சேம்பியன் பட்டம் பெற்றனர்.
 கொடைக்கானல் போட் அண்டு ரோயிங் கிளப் சார்பில் ஆண்டுதோறும் மே மாதத்தில் சுற்றுலா பயணிகளையும் உள்ளுர் மக்களை கவரும் விதத்திலும் போட்டிகளில் பங்கு பெறும் விதத்திலும் படகுப் போட்டிகள் நடத்தப்படும். இந்த ஆண்டின் படகுப் போட்டிகள் நேற்று முன் தினம் துவங்கி இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது. படகு போட்டிகளின் விபரம் வருமாறு:
 ஆண்கள் ஒற்றையர் படகுப் போட்டியில் ஸ்ரீனிவாசா முத்துக்கருப்பன் முதலிடத்தை பெற்றார். ஆண்கள் இரட்டையர் போட்டியில் ஆதித்ய துரைராஜா, தேவந்திரன் ஆகியோர் முதலிடத்தை பெற்றனர். சீனியர் கலப்பு இரட்டையர் போட்டியில் உத்ரா, சேக்அப்துல் ஜோடி முதலிடம் பிடித்தது. பெண்கள் ஒற்றையர் போட்டியில் மின்தமி முதலிடம் பிடித்தார். பெண்கள் இரட்டையர் போட்டியில் மின்தமி, பிரியா ஜோடி முதல் பரிசு பெற்றனர். ஜுனியர் சிறுவர்களுக்கான போட்டியில் நிதின் டேனியர் முதலிடத்தை பெற்றார். ஜுனியர் இரட்டையர் போட்டியில் விசால் ஸ்காட், நிதின் ஜோடி முதலிடத்தை பெற்றது. ஜுனியர் சிறுமிகளுக்கான படகு போட்டியில் லீனா பாத்திமா முதல் பரிசு பெற்றார். ஜுனியர் சிறுமிகள் இரட்டையர் போட்டியில் லீனா பாத்திமா, அம்ரிதா ஜோடி முதலிடம் பிடித்தது. ஜுனியர் கலப்பு இரட்டையர் போட்டியில் வள்ளியம்மை, நிதின் ஜோடி முதல் பரிசு பெற்றது. சப் ஜுனியர் சிறுவர் ஒற்றையர் படகுப் போட்டியில் கிரன் ஸ்காட் முதலிடம் பிடித்தார். இதே பிரிவில் இரட்டையர் போட்டியில் கிரன், சாத்விக் ஜோடியும், சிறுமிகள் ஒற்றையர் பிரிவில் அம்ரிதாவும் முதலிடம் பிடித்தனர். பண்ட் படகு போட்டியில் ராதா, பிராபா, டேனியல், தேவா குழுவினர் முதலிடம் பிடித்தனர். வாசித் முதியோர் போட்டியில் முதலிடம் பெற்றார். போட்மேன் போட்டியில் சதீஸ்,பிரவீன் ஜோடி முதலிடம் பெற்றது. 20 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
  வாத்து பிடிக்கும் போட்டி: படகுப் போட்டிகள் தவிற சுற்றுலா பயணிகள் பொது மக்கள் அதிகம் கண்டு ரசிக்கும் போட்டியானது இந்த வாத்து பிடிக்கும் போட்டி. தட்டை அமைப்பில் உள்ள இந்த படகில் இரண்டு ஆண் போட்டியாளர்கள் படகினை துடுப்பு போட்டு செலுத்து மறு முனையில் உள்ள பெண் போட்டியாளர் தண்ணீரில் நீந்தும் வாத்தை குறிப்பிட்ட 15 நிமிட அவகாசத்தில் பிடிக்க வேண்டும். 7 படகுகளில் 21 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். கடந்த இரண்டு நாட்களும் நடத்தப்பட்ட இந்த வாத்து பிடிக்கும்  போட்டிகளில் ஏரியில் நீந்த விடப்பட்ட வாத்தை குறிப்பிட்ட நேரத்தில் போட்டியாளர்கள் யாரும் பிடிக்காததால் வாத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 இந்த போட்டிகளில் பெண்கள் சேம்பியனாக மின்தமியும், ஆண்கள் சேம்பியனாக ஆதித்யா துரைராஜாவும், சப் -ஜுனியர் சேம்பயனாக கிரன் ஸ்காட்டும், ஜுனியர் சிறுவர் சேம்பியனாக நிதின் டேனியலும்,சிறுமிகள் சேம்பியனாக லீனா பாத்திமாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
 பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். போட் கிளப் தலைவர் ராமச்சந்திர துரைராஜா வரவேற்றார். செயலாளர் பவானி சங்கர் முன்னிலை வகித்தார். விழாவில் வருமான வரித்துறை ஆணையர்கள் ரூபாவினய், சிவபிரசாத், போட் கிளப் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடுவர்களாக அமிதாசட்டர்ஜி, மரியபால் சார்லஸ், லோகநாதன், இருந்தனர், முன்னதாக போட்டிகளை உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் துவக்கி வைத்தார். போட்டி மற்றும் விழாக்களுக்கான ஏற்பாடுகளை போட்கிளப் மேலாளர் செந்தில் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்