முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டன்ட் மாஸ்டராக நடிக்கும் பிரபுதேவா

திங்கட்கிழமை, 22 மே 2017      சினிமா
Image Unavailable

Source: provided

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அதை தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் “ஓடி ஓடி உழைக்கனும்“ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....இதை தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும் “ எங் மங் சங் “ படத்தையும் தயாரிக்கிறார்கள்.

தேவி வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது.. கதாநாயகியாக லஷ்மிமேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், சித்ராலட்சுமணன், கே.ராஜன், R.j. பாலாஜி,பாகுபலி பிரபாகர் ( கலக்கேயா), கும்கி அஸ்வின், நாகேந்திரபிரசாத், முனீஸ்காந்த், காளி வெங்கட், மாரிமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - ஆர்.பி.குருதேவ் (இவர் காஞ்சனா 2, யோகி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர். இசை - அம்ரீஷ்பாடல்கள் - பிரபுதேவா, மு.ரவிகுமார், மக்கள் தொடர்பு - மௌனம்ரவி, எடிட்டிங் - நிரஞ்சன், பாசில்கலை - ராஜன்.D, தயாரிப்பு மேற்பார்வை - ஆர்.பி.பாலகோபி, தயாரிப்பு - கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.எஸ்.அர்ஜுன். நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா ஆரம்ப காலத்தில் டான்ஸ் மாஸ்டராக கொடி கட்டியவர்.

அதற்கு பிறகு நடிகராகவும், இயக்குனராகவும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். டான்ஸ் மாஸ்டரான பிரபுதேவா, ஸ்டன்ட் மாஸ்டராக அதாவது குங்பூ சண்டை பயிற்சியாளராக நடிக்கும் படம் “ எங் மங் சங் “ முழுக்க முழுக்க காமெடி கலக்கல் படமான “ எங் மங் சங் “ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்