முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதியின் சென்னை பயணம் திடீர் ரத்து

திங்கட்கிழமை, 22 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் சென்னை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தலைவர் ஒருவரின் வருகையால் ஜனாதிபதியின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை  தமிழகம் வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. விமானம் மூலம் கோவை செல்லும் அவர் உதகையில் நடைபெறும் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது
பின்னர் சென்னை வரும் பிரணாப் முகர்ஜி குண்டு துளைக்காத கார் மூலம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் காமாட்சியம்மன் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சங்கரா பல்கலைக் கழக விழாவில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் படுவேகமாக நடைபெற்றது.

இந்நிலையில் ஜனாதிபதியின்  சென்னை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு தலைவர் ஒருவர் இந்தியா வருவதால், பிரணாப் முகர்ஜியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago