முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் மோகன் பகவத்தை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை - அமித்ஷா திட்டவட்டம்

திங்கட்கிழமை, 22 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை பாரதிய ஜனதா இன்னும் முடிவு செய்யவில்லை என அக்கட்சியின் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். எனினும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, புதிய ஜனாதிபதியாக யாரை நிறுத்துவது என்பது குறித்து பல்வேறு கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்தலாம் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. எனினும், வேட்பாளர் யார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, பாரதிய ஜனதா தனது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என குறிப்பிட்டார். தனது மனதில் ஒருவரது பெயர் இருப்பதாகவும், கட்சியின் தலைமையை கலந்தாலோசித்த பின்னரே இதுகுறித்து முடிவு வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சிவசேனா கட்சி வலியுறத்தி வருவதுபோல, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை ஜனாதிபதியாக நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்னையை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன என்றும், உண்மையில் அங்கு 3 மாவட்டங்களில்தான் பிரச்னை இருப்பதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்