முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலையில் ஹெல்மெட் இருந்தால்தான் வண்டிக்கு பெட்ரோல் கிடைக்கும்: உ.பி. முதல்வர்

திங்கட்கிழமை, 22 மே 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ, உ.பி. தலைநகர் லக்னோவில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு இன்று முதல் பங்குகளில் பெட்ரோல் விற்பனை செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கடந்த வாரம் இந்த உத்தரவை வெளியிட்டிருந்தது.

இதை நடைமுறைப்படுத்தும் விதமாக லக்னோ போலீசார் பெட்ரோல் நிலையங்களுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களுக்கு கடந்த 3 நாட்களாக சிறப்புப் பயிற்சி அளித்து வந்தனர். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதே போல கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில் வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல், ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளசுது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்