முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11, 12-ம் வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்

திங்கட்கிழமை, 22 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : 11, 12-ம் வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியபோது,

''11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 11, 12 வகுப்புகளில் இரண்டு பொதுத் தேர்வுகளின் மதிப்பெண்களையும் கணக்கிட்டு சராசரி அடிப்படையில் ஒரே சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் உள்ளது போல 3 ஆண்டுகளின் மதிப்பெண் சராசரியைக் கொண்டு கடைசி ஆண்டில் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
'மதிப்பெண்களைக் குறைக்கத் திட்டம்'

11, 12-ம் வகுப்புகளுக்கு 200 மதிப்பெண்கள் என்பதை, பாடவாரியாக 100 மதிப்பெண்கள் என்று குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தேர்வு நேரமும் குறைய வாய்ப்புண்டு.  பாடத் திட்டத்திலும் மாற்றம் கொண்டுவர அரசாணை விரைவில் வெளியாகும்.  வகுப்புகளுக்கு ஏற்றவாறு சீருடைகளை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்'' என்று தெரிவித்தார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்வித் துறை அமைச்சரும், செயலாளரும் பதவியேற்ற பிறகு இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்