முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டின்போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேசிய கீதம் பாடப்பட்டதா?

திங்கட்கிழமை, 22 மே 2017      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டின் தொடக்கத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேசிய கீதம் பாடப்பட்டதாக வீடியோ படம் வெளியாகியுள்ளதையொட்டி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 45 நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் இரண்டு கிரிக்கெட் அணிகளை சேர்ந்த வீரர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மாதிரி உடை அணிந்து விளையாடியதோடு ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் தேசிய கீதம் பாடப்பட்டதாக கூறப்பட்டது.

அதனையடுத்து தற்போது தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டு நடந்ததாகவும் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் தேசிய கீதம் பாடப்பட்டதாகவும் வீடியோ படம் வெளியாகியுள்ளது. இது உண்மையாய என்பதை அறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புல்வாமா மாவட்ட கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஷைனிங் கிரிக்கெட், புல்வாமா டைகர் என்ற  பெயரில் இரண்டு அணிகள் விளையாடியதாகவும் விளையாட்டு தொடங்குமுன்பு இந்த கீதம் பாடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ படம் வெளியாகியுள்ளது. ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. மைதானத்தில் தீவிரவாதிகளின் படங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததாகவும் விளையாட்டிற்கு பின்பு சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் பெயரில் பரிசுகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் நம்பகத்தன்மை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தின் அருகில் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிதான் போராட்டத்தின் மையமாக விளங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்