முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறந்த குழந்தைகளுக்கு முதல் 1 வருடத்துக்கு பழச்சாறு கொடுக்காதீர்கள்: மருத்துவக் குழு

திங்கட்கிழமை, 22 மே 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பிறந்த குழந்தைகளுக்கு முதல்1 வருடத்திற்குள் பழச்சாறுகளை கொடுக்க கூடாது என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2001-க்கு பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ள பிறந்த குழந்தைகளுக்கான உணவு முறை குறித்த பட்டியலில் இந்த புதிய கட்டுப்பாடு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு முன்பு வரை பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் வரை பழச்சாறு கொடுக்க கூடாது என்று சொல்லப்பட்டிருந்தது. அது தற்போது மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு பிறந்த குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பழங்களை அப்படியே சாப்பிடுவதில் இருக்கும் நன்மை, அதனை சாறாக பிழிந்து குடிப்பதில் கிடைப்பதில்லை என்று மருத்துவர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்ப்பாலில் கிடைக்கும் சத்து

மேலும் பிறந்த குழந்தைக்கு முதல் ஓராண்டில் தாய்ப்பாலில் கிடைக்கக் கூடிய புரதச்சத்து உள்ளிட்ட சத்து வேறு எந்த வகையான உணவு வகைகளிலும் கிடைப்பதில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  ஒரு வருடத்திற்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்கப்படும் போது வளர்ந்த பிறகு அவர்களுக்கு பற்சிதைவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஒரு வயது முதல் 12 வயது வரை அதிக அளவு பழங்களை குழந்தைகளை உண்ண வேண்டும். அப்போது கூட பழங்களை கடித்து உண்பதே சிறந்தது என்றும் அமெரிக்க மருத்துவர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்