முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையங்கள் துறை சார்பில் மழைவேண்டி சிறப்பு யாகம் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

திங்கட்கிழமை, 22 மே 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையங்கள் துறை சார்பில் மழைவேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இச்சிறப்பு வழிபாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மழைவேண்டி யாகம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் மழைபொழிவின்றி நீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்து சமய அறநிலையங்கள்துறை சார்பில்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  அறிவுறையின்படி, மாவட்டத்திலுள்ள முக்கிய சிவத்தலங்களில் மழைவேண்டி யாகம் நடத்த கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, இன்று பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் நந்தியை கழுத்தழவு தண்ணீரில் மூழ்கச்செய்தும், மழைவேண்டி கோவில் குருக்களால் தேவாரங்கள் மூலம் சிவனை வேண்டியும், கஜபூஜை நடத்தியும், தீர்த்த தண்ணீர்களை தெப்பக்குளத்தில் பூஜித்து ஊற்றியும் வருண பகவானை வேண்டினர்.

சிறப்பு யாகம்

அதுபோல் மாவட்டத்திலுள்ள முக்கிய சிவத்தலங்களான  அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில், அருள்மிகு வனபத்திரகாளியம்மன் திருக்கோவில் தேக்கம்பட்டி, அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோவில் அன்னூர் வட்டம், அருள்மிகு இராமலிங்கசாமி திருக்கோவில் இடுகம்பாளையம் மேட்டுப்பாளையம் வட்டம், அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம், அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில் கோட்டை கோவை நகர்வட்டம், அருள்மிகு பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோவில், உப்பாரவீதி கோவை நகர் உள்ளிட்ட இடங்களிலும் மழைவேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பனர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், கனகராஜ், கஸ்தூரி வாசு, உள்ளிட்டோரும், சமூக ஆர்வளர்களும், இறை தொண்டர்களும், பொதுமக்களுமென ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்