முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 48 நபர்களுக்கு ரூ.12.00 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கள்: அமைச்சர் பி.தங்கமணி டாக்டர்.வி.சரோஜா வழங்கினர்

திங்கட்கிழமை, 22 மே 2017      நாமக்கல்
Image Unavailable

 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், போக்கம்பாளையம் கிராம மக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கும் விழா இன்று (20.05.2017) நடைபெற்றது. இவ்விழாவிற்;கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். இவ்விழாவிற்கு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள், சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், போக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 48 நபர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.12.00 இலட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார்கள்.

கோரிக்கை

அதனைத்தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள், சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று கலெக்டர் அவர்களிடம் வழங்கி அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்கள்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் இரா.கீர்த்தி பிரியதர்சினி, திருச்செங்கோடு வருவாய் வட்டாட்சியர் பூவராகவன், அரசு வழக்கறிஞர் தனசேகரன், நாமக்கல் - சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த ஆவின் தலைவர் ஆர்.சின்னுசாமி, டி.சி.எம்.எஸ்.தலைவர் பி.என்.கந்தசாமி, மாவட்ட கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் ஈ.ஆர்.சந்திரசேகரன் உட்பட கூட்டுறவாளர்கள், முன்னால் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வருவாய்த்துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago