முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 நாடு ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய பெண்கள் அணி ‘சாம்பியன்’

திங்கட்கிழமை, 22 மே 2017      விளையாட்டு
Image Unavailable

போட்செப்ஸ்ட்ரூம் : இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 4 நாடுகள் இடையிலான பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடந்து வந்தது.

அபார வெற்றி

இதில் தலா 5 வெற்றிகளுடன் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் இறுதிப்போட்டியில் நேற்று முன்தினம் சந்தித்தன. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 40.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஜூலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி 33 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, சாம்பியன் கோப்பையையும் வசப்படுத்தியது. இந்திய கேப்டன் மிதாலி ராஜ் 62 ரன்களுடனும், பூனம் ரவுத் 70 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

100-வது ஆட்டம்

கேப்டன் பதவியில் மிதாலிராஜிக்கு இது 100–வது ஆட்டமாகும். இந்த மைல்கல்லை எட்டிய 3–வது வீராங்கனை மிதாலி ராஜ் ஆவார். அதிக ஆட்டங்களுக்கு கேப்டன் பதவி வகித்த சாதனையாளர் வரிசையில் இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் (117 ஆட்டம்), ஆஸ்திரேலியாவின் பெலின்டா கிளார்க் (101) முதல் இரு இடங்களில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்