முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை தாலுக்கா அலுவலகத்தில் 2வது நாளாக ஜமாபந்தி 366 மனுக்கள் குவிந்தன உடனடி நடவடிக்கை

திங்கட்கிழமை, 22 மே 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் 2வது நாளாக நேற்று ஜமாபந்தி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும் ஜமாபந்தி அலுவலருமான ப.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

ஜமாபந்தி

வருவாய், தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி வருகிற 29ந் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜமாபந்தியில் வருவாய் நிர்வாக கணக்குகள் தணிக்கை, பட்டா மாறுதல், வருவாய்த்துறை தொடர்பான புகார்கள் குறைகளுக்கு தீர்வு காணப்படும்.

கடந்த வெள்ளியன்று ஜமாபந்தி தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று (திங்கட்க்கிழமை) திருவண்ணாமலை வடக்கு உள்வட்டத்திற்குட்பட்ட தி.மலை, கீழ்நாத்தூர், ஆடையூர், வேங்கிக்கால், சின்னகாங்கியனூர், நல்லான்பிள்ளைபெற்றாள், பள்ளிகொண்டாப்பட்டு, சம்பந்தனூர், நொச்சிமலை, சோ.கீழ்நாச்சிப்பட்டு, வாணியந்தாங்கல், மலப்பாம்பாடி, சு.பள்ளியம்பட்டு, சாவல்பூண்டி, கீழ்அணைக்கரை, மேலத்திக்கான், அடிஅண்ணாமலை, கோசாலை, தேவனந்தல், அய்யம்பாளையம், அத்தியந்தல், ஆணாய்பிறந்தான், காவேயாம்பூண்டி, பண்டிதப்பட்டு, கணந்தம்பூண்டி ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.

இந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் தாசில்தார் ஆர்.ரவி, சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, திருவண்ணாமலை மண்டல துணை தாசில்தார் பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்றார். ஜமாபந்திக்கு தலைமையேற்று மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும் ஜமாபந்தி அலுவலருமான ப.சுப்பிரமணியன் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் மனுக்களை பெற்றார். 2ம் நாளான நேற்று நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் மொத்தம் 366 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக 15 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தலைமை நில அளவர் ஆர்.வரதராஜன், வேளாண் உதவி இயக்குநர் சி.அரக்குமார், வேளாண் அலுவலர் கே.சந்திரன், தலைமையிடத்து துணை தாசில்தார் ஆர்.செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் சீனிவாசன், விஜயராஜ், அரிகிருஷ்ணன், கஜேந்திரன், கலைவாணன், சுதா, அமதா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் கே.மணிகண்டன் நன்றி கூறினார்.3ம் நாளான இன்று (செவ்வாய்கிழமை) துரிஞ்சாபுரம் உள்வட்டம் மற்றும் தச்சம்பட்டு உள்வட்டங்களில் அடங்கிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்