முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினர் சேர்க்க சிறப்பு பதிவு முகாம்

திங்கட்கிழமை, 22 மே 2017      நீலகிரி

தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினர் சேர்க்க சிறப்பு பதிவு முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக தொழிலாளர் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

17 நல வாரியங்கள்

கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர், அமைப்புசாரா ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், தையல் தொழிலாளர், கைவினைத் தொழிலாளர், காலணி தயாரிக்கும் தொழிலாளர், ஓவியர், பொற்கொல்லர், மண்பாண்டத் தொழிலாளர், வீட்டுப்பணியாளர், பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கென 17 நல வாரியங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாரியங்களில் தொழிலாளர் பதிவு சேர்க்கை மாவட்ட தொழிலாளர் அலுவலர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

10 மணி நடைபெறவுள்ளது

நீலகிரி மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியங்களில் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு பதிவு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் சமையல் பணிபுரியும் பணியாளர்களின் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்படி வரும் 25_ந் தேதி மஞ்சூர் பாய்ஸ் உயர்நிலைப்பள்ளியிலும், 26_ந் தேதி கூடலூர் தோட்ட நிறுவன ஆய்வாளர் அலுவலகத்திலும், 30_ந் தேதி தூதூர் மட்டம் சமுதாய கூடத்திலும் நடைபெறுகிறது. முகாம்கள் அனைத்தும் காலை 10 மணி முதல் நடத்தப்பட உள்ளது. மேற்படி நலவாரியங்களில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் பதிவு கோரும் விண்ணப்பத்தினை உரிய படிவத்தில் இம்முகாமில் நேரில் அளித்து வாரியத்தில் பதிவு செய்து வாரிய நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம். பதிவு கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் வயது 18 முதல் 60 க்குள் இருக்க வேண்டும்.

உரிய நபர் விண்ணப்பிக்க வேண்டும்

முகாமிற்கு வரும் போது இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சான்றொப்பமிட்ட குடும்ப அட்டை நகல், ஆதார் அடையாள அட்டை நகல், வயது குறித்த சான்று, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தொழில் பற்றிய சான்றினை உரிய நபர் அல்லது, அலுவலரிடம் விண்ணப்பத்தில் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். அரசின் பிற துறையின் கீழ் உள்ள வாரியங்கள், திட்டங்கள் மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு பெற்றவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்ய இயலாது. எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago