முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி அருகே சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு : 13 பேர் காயம்

திங்கட்கிழமை, 22 மே 2017      தூத்துக்குடி

வல்லநாடு அருகே நள்ளிரவில் பாலத்தில் சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளானதில் அண்ணன், தங்கை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

 கோடை விடுமுறைக்கு

தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் அருகேயுள்ள பாலையாபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(50). இவர் மும்பையில் ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நல்லம்மாள்(45). இவர்களுக்கு பேரின்பம்(23), இன்பராணி(20) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். பேரின்பம் பிகாம் படித்துள்ளார். கோடை விடுமுறைக்கு தங்கராஜ் குடும்பத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன் சொந்த ஊரான தூத்துக்குடி பாலையாபுரத்திற்கு வந்தார்.

சுற்றுலா

சம்பவதன்று தங்கராஜ், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கன்னியாகுமரிக்கு வேனில் சுற்றுலா சென்றார். இதில் தங்கராஜின் மனைவி, மகள்கள், தாய் சேர்மம், தங்கை புஷ்பம், அவரது கணவர் முத்துராஜ் மற்றும் சூரங்குடியை சேர்ந்த டெய்லர் சின்னமணி(56), அவரது மனைவி தமிழரசி(50), மகன் சசி(22), உறவினர்கள் செல்வநாதன், அவரது மனைவி இதயகனி, குழந்தைகள் நிதிஷ்குமார், நிஷா மித்ரா உள்ளிட்ட 20 பேர் வேனில் சென்றனர்.

சுவரில் மோதி விபத்து

வேனை தூத்துக்குடி போல்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த நவமணி மகன் பாக்கியராஜ் (36) ஓட்டிச்சென்றார். சுற்றுலா சென்ற அவர்கள் அங்கு பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு, இரவு ஊருக்கு திரும்பி னர். வல்லநாடு மருதூர் கீழக்கால் பாலத்தில் சென்றபோது வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரில் மோதி கவிழ்ந்தது.

3 பேர் பலி

இதில் சின்னமணி, புஷ்பம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். தங்கராஜ் உள்ளிட்ட 14 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தங்கராஜ் பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. 13 பேருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்