முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் இன்று ரூ.26.54 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பங்கேற்கிறார்

திங்கட்கிழமை, 22 மே 2017      தூத்துக்குடி

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத்தரத்தனை மேம்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தலா ரூ.58,690 மதிப்பில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20,54,150/= லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கர பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் தலா ரூ.20,000/= ம் மதிப்பில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு  ரூ.6,00,000/= லட்சம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளையையும், ஆக மொத்தம் 65 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26,54,150/= லட்சம் மதிப்பலான நலத்திட்டத்தையும் கலெக்டர் எம்.ரவி குமார் தலைமையில்,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  இன்று (23.5.2017) மாலை 3.00 மணிக்கு வழங்குகிறார்கள்.

 புதிய கட்டிடம் திறப்பு

மேலும்,  தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக்காட்சி மூலம் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கயத்தார் வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறார்கள். அதனை மாலை 3.30 மணிக்கு கலெக்டர் எம்.ரவி குமார்  தலைமையில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ குத்துவிளக்கேற்றி புதிய கட்டடத்தை பார்வையிட உள்ளார்கள்.

பல்வேறு கட்டிடங்கள்

மேலும், மாலை 4.30 மணிக்கு, கழுகுமலையில் ரூ.21 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தக கட்டடத்தையும், பின்னர் கடம்பூர் பேரூராட்சி கோடங்காலில் மாலை 6.00 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைக்கிறார்கள். இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்