முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க அம்மா அணி பொதுக்குழு உறுப்பினர் மறைவு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

திங்கட்கிழமை, 22 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : அதிமுக பொதுக்குழு உறுப்பினர் விஜயாவிஜயகுமார் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரும் அதிமுக அம்மா அணியின் தலைமைக்கழக செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

தென் சென்னை வடக்கு மாவட்டம், கழகப் பொதுக்குழு உறுப்பினர் விஜயா விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த விஜயா விஜயகுமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணி செயலாளர், மாவட்ட மகளிர் அணி பொருளாளர், மாவட்டக் கழக இணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புச் சகோதரி விஜயா விஜயகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்