டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தல்: காங்கிரஸ்-ஆம் ஆத்மி கட்சி வெற்றி

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      அரசியல்
Congress 2017 4 3

புதுடெல்லி, டெல்லி மாநகராட்சியில் 2 வார்டுகளில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றிபெற்றது.

டெல்லி மாநகராட்சியில் கிழக்கு,தெற்கு, வடக்கு ஆகிய 3 மாநகராட்சிகளுக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா 3 மாநகராட்சிகளையும் பிடித்தது. இதில் 2 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கவில்லை. வடக்கு மாநகராட்சியில் உள்ள சாரை பைபால் வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் முகேஷ் கோயல் வெற்றிபெற்றார். கிழக்கு டெல்லியில் உள்ள மவுஜ்பூர் வார்டில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றிபெற்றார். மவுஜ்பூர் வார்டில் கடந்த 14-ம் தேதியும் சாரை பைபால் வார்டில் கடந்த 21-ம் தேதியும் இடைத்தேர்தல் நடந்தது. முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலா ஒரு இடத்தில் வெற்றிபெற்றது என்று டெல்லி மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த இரண்டு வார்டுகளில் மாநகராட்சி தேர்தலின்போது போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்கள் இறந்துவிட்டதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம் எழுந்துள்ள நிலையில் இந்த இரண்டு கட்சிகளும் வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: