முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      சினிமா
Image Unavailable

ஊட்டி : பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், விஜயகுமார், சூர்யா உள்ளிட்ட 8 பேர் மீது நீலகிரி மாவட்ட நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு தமிழ்த் திரைப்பட நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டது குறித்த செய்தி பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியானது. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சத்யராஜ், சரத்குமார், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து நீலகிரி மாவட்ட பத்திரிகையாளர்  ருசோரியா மரிய சூசை என்பவர் வழக்கு தொடுத்தார். எனினும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, நடிகர்கள் யாரும் ஆஜராகவில்லை. மேலும், இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர்கள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

கடந்த 15-ம் தேதிக்குள் நடிகர்கள் ஆஜராக வேண்டும் என நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டிருந்தும் யாரும் ஆஜராகாத நிலையில், உயர்நீதிமன்றம் நடிகர்களின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து, இந்த அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 8 பேரும் உடனடியாக ஆஜராக வேண்டும் என ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் நீலகிரி நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago