முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1-ம் வகுப்பு முதல் +2 வரை பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ-க்கு இணையாக மாற்றம் - அரசாணை வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டம் சிபிஎஸ்இ பாடத்திற்கு இணையாக மாறுகிறது. முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து பாடத்திட்டங்களும் மூன்றாண்டுகளில் மாற்றம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை தலைமைசெயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

சி.பி.எஸ்.இ-க்கு இணையாக ...

1-ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையில் ஏறத்தாழ 7 ஆண்டுகாலத்தில் பாடநூல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 11,12 ம் வகுப்பு தேர்வில் 12 ஆண்டுகள் கடந்தும் அதே பாடத்திட்டம் மாற்றப்படாமல் இருக்கிறது. அதனை மாற்றி அமைக்கும் வகையில், எதிர்காலத்தில் மாணவர்கள் மத்திய அரசின் பொதுத் தேர்வினை சந்திக்கும் வகையிலும், இந்திய அளவில் சி.பி.எஸ்.இ பாடத்திற்கு இணையாக பாடநூல்களை வெளியிடுவதும், அது எந்த நிலைக்கு செல்கிறது என்பதை மாற்றும் வகையில், தமிழர்களின் தொன்மை, பண்பாடு, வரலாறு மற்றும் கலை, இலக்கியம் போன்றவைகளை அதில் இணைக்கப்படும். தமிழர்களின் பண்பாடு, கலச்சாரம் அனைத்தும் இணைக்கும் போது மற்றவர்களுக்கு கேள்வியாக இருக்காது.

படிப்படியாக மாற்றம்

பாடநூலை மாற்றுவது போது 2018 - 19ம் ஆண்டில் 1,6,9,11 ம் வகுப்பிற்கும், 2019-20 ம் ஆண்டில் 2,7,10,12 ம் வகுப்பிற்கு மாற்றப்படும். 2020 - 21 ம் ஆண்டில் 3,4,5 மற்றும் 8 ம் வகுப்பிற்கு பாடநூல் மாற்ற 3 ஆண்டில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. ஆகவே படிப்படியாக பாடநூல்களை மாற்றி தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. அதற்கான ஆணையை தமிழக முதல்வர் வழங்கினார். அதனை வெளியிடுகிறோம்.

மக்கள் கல்விமுறை எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறார்களோ அதற்கு ஏற்ப உயர்மட்டகுழு வைத்துக் கொண்டு மக்கள், மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு இணையாக கல்வி மாற்றம் உருவாக்கப்படும். தமிழர்களின் பண்பாடு, கலச்சாரம் மற்றும் அனைத்தும் அதில் மாற்றுக்கட்சியினர் கேட்காத வகையில் உருவாக்கப்படும். பாடத்திட்டம் குறித்து முதல்வருடன் கலந்து பேசி உள்ளோம். துணை வேந்தர்கள், கல்வியாளர்கள் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் பொறுப்பாளர்கள் கல்விமுறை அறிந்து வந்துள்ளனர். அதன் அடிப்படையில் அமைக்கப்படும்.

கொள்கைத்தான்

வரைவுப் பாடத்திட்டம் இனிமேல் தான் தயாரிக்கப்படும். அப்போது அனைவரின் கருத்துகள் கேட்கப்படும். தமிழக அரசை பொறுத்தவரையில் ஒரே கொள்கைத்தான். தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வில் விலக்கு கோருவதற்கான சட்டம் இயற்றப்பட்டு, 3 முறை பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதமரை சந்திக்கும் போதும் நீட் குறித்து வலியுறுத்தி கொண்டுதான் இருக்கின்றோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago