முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய் - 30 ரக போர் விமானம் மாயம்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய் – 30 ரக விமானம், இந்திய – சீன எல்லையில் பறந்து கொண்டிருந்த போது ரேடார் உடனான தொடர்பை இழந்து மாயமானது.
இன்று காலை 9.30 மணிக்கு அசாம் மாநிலம் தேஜ்பூர் படை தளத்திலிருந்து இரண்டு விமானிகளுடன் சுகோய் – 30 ரக விமானம் பறக்க தொடங்கியது. முற்பகலில் தேஜ்பூரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரின் தொடர்பை இழந்துள்ளது.

தீவிர விசாரணை 

ரேடாரின் தொடர்பை இழந்த இடமானது ஏற்கனவே அதிக சர்ச்சைக்குள்ளான இந்திய – சீன எல்லையாகும். மாயமாகியுள்ள விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதா அல்லது வேறு ஏதும் காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விமானப் படையினர் தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளனர்.

இந்த எல்லைக் கோட்டிற்கு அருகில் சீனாவின் விமானப் படை தளமும் இருப்பதால், அந்நாட்டு ரேடார் சிக்னல்களால் சுகோய் – 30 ரக விமானம் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விபத்துக்கான வாய்ப்புகள்  குறைவு

இந்திய விமானப் படையில் சமீபத்தில் இணைக்கப்பட்ட நவீன ரக விமானங்களில் ஒன்று சுகோய் – 30 ரக விமானம் ஆகும். சூப்பர் சோனிக் ரக தொழில்நுட்பத்தில் இயங்கும் சுகோய் ரக விமானங்களில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. பயிற்சி, கண்கானிப்பு உள்ளிட்ட பணிகளில் இந்த விமானங்கள் தற்போது இந்திய விமானப் படையால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்