முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்கள் ஆட்சியில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் பாயும்: யோகி ஆதித்யநாத்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ : எங்கள் ஆட்சியில் குற்றவாளிகளுக்கு எதிராக  கடுமையான சட்டங்கள் பாயும் என்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்  தெரிவித்துள்ளார். மேலும் உ.பி.யில் முந்தைய ஆட்சியாளர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த முதல்வர் யோகி ஆதித்யநாத், மதச்சார்பின்மையின் பொருள் ஒரு மதத்தின் மீதான அபிமானமல்ல என்றும்  கூறியுள்ளார்.

முந்தைய உ.பி. ஆட்சியாளர்கள் சாதி, மத அடிப்படையில் பாகுபாடுகளை கடைபிடித்ததாக கடுமையாக சாடினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது,

மதம், சாதி போன்றவை கிடையாது

“வாக்கு வங்கி அரசியலால் தேசப்பற்றாளர்களான ராம் பிரசாத் பிஸ்மில், ஆஷ்ஃபகுல்லா கான், அப்துல் ஹமித் போன்றோர் பாடப்புத்தகங்களில் இடம்பெறவில்லை.  நாம் உண்மையாக மதச்சார்பற்றவர்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், சாதி, மதம் மீது மட்டுமே அபிமானம் கொள்ள முடியாது. முந்தைய சமாஜ்வாடி, பகுஜன் அரசுகள் சாதி மதம் ரீதியாக பாகுபாடுகளை மேற்கொண்டது.  ஆனால் எங்களுக்கு மதம், சாதி போன்றவை கிடையாது” என்றார்.

அதே போல் மாநில இளைஞர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு பெயர வேண்டிய அவசியமில்லை, இங்கேயே மரியாதைக்குரிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், என்றார். அரசியலை குற்றவயமக்குதலும், குற்றவாளிகளை அரசியல்வயமாக்குவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் முடிகிறது. எனவே எங்கள் ஆட்சியில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் பாயும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.  உ.பி.யில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு பேசினார் ஆதித்யநாத்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago