முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருண் ஜெட்லி தொடர்ந்த புதிய அவதூறு வழக்கு: கெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்த புதிய அவதூறு வழக்கில் விளக்கமளிக்குமாறு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற சார் பதிவாளர் பங்கஜ் குப்தா நோட்டீஸ் அனுப்பினார். அநத் நோட்டீஸில், ஜெட்லி தொடர்ந்துள்ள புதிய அவதூறு வழக்கை ஏன் விசாரிக்கக்கூடாது என்பது குறித்து தெஜ்ரிவால் விளக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை 26-ம் தேதிக்குள் கெஜ்ரிவால் அவரது விளக்கத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்யுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வழக்கு விவரம்:

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ரூ.10 கோடி கேட்டு நிதியமைச்சர் அருண் ஜெட்லி புதிய அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.  டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராக 2000 முதல் 2013 வரை பதவி வகித்த காலத்தில் அருண் ஜெட்லி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மியின் தலைவரும் டெல்லி யின் முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்த அருண் ஜெட்லி, தன் மீது வீணாக அவதூறு பரப்பியதாக கூறி அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மியின் பிற தலைவர்கள் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 15 மற்றும் 17-ம் தேதி களில் நடந்தது. அப்போது கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, அனைவர் முன்னிலையில் அருண் ஜெட்லியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

ரூ.10 கோடி கேட்டு புதிய வழக்கு

கெஜ்ரிவாலின் வற்புறுத்தலின் பேரிலேயே அவர் இவ்வாறு பேசியதாக கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மன்மோகனும் ஆட்சேபம் மிக்க கருத் துக்கு கண்டனம் தெரிவித்து கெஜ்ரிவாலுக்கு எதிராக மற்றொரு வழக்கு தொடரலாமே என கூறினார்.  இதைத் தொடர்ந்து அருண் ஜெட்லி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாணிக் டோக்ரா, கெஜ்ரிவாலுக்கு எதிராக ரூ.10 கோடி கேட்டு புதிதாக மற்றொரு அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளதாக தெரிவித்தார்.  இந்நிலையில் நேற்று  இந்த வழக்கில் விளக்கமளிக்குமாறு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago