முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டனின் மேன்செஸ்டர் நகர் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி - தலைவர்கள் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      உலகம்
Image Unavailable

மான்செ.ஸ்டர் : பிரிட்டனின் புகழ்பெற்ற நகரான மேன்செஸ்டர் நகரில்  நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் பலியாகினர். 59 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல் மனித வெடிகுண்டு தாக்குதல் எனத் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேன்செஸ்டர் நகரில் உள்ள ஒரு மைதானத்தில் அமெரிக்க இசைக் கலைஞர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 10.35 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக மேன்செஸ்டர் பெருநகர போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேன்செஸ்டர் பகுதியில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து அங்கு அவசர சேவைப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அப்பகுதிக்குச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தெரசா மே கண்டனம்:

மேன்செஸ்டர் நகர் தாக்குதல் குறித்து பிரிட்டன் பிதமர் தெரசா மே வெளியிட்டுள்ள அறிக்கையில், "இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலை போலீஸார் தீவிரவாத தாக்குதலாகவே கருதுகின்றனர். இத்தாக்குதல் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மோடி கண்டனம்:

"மேன்செஸ்டர் நகர தாக்குதல் வருத்தமளிக்கிறது. இத்தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கிறேன்" எனப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கனடா பிரதமர் கண்டனம்:

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ராட் தனது ட்விட்டர் பக்கத்தில், "மேன்செஸ்டர் நகரில் நடந்த கொடூரத் தாக்குதலால் கனடா நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்