முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் பிரதமர் மோடியுடன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 5.30 மணியளவில் புதுடெல்லி புறப்பட்டு சென்றார். அவர் இன்று பகல் 11.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
பிரதமருடன் சந்திப்பு
இந்த நிலையில் அ தி.மு.க. அம்மா அணியின் தலைமைக்கழக செயலாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்புக்கு நேரம் ஒதுக்குவதற்கான கடிதம், தமிழக அரசிடம் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லிக்கு வருகிறார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 11.30 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார்.
ஜனாதிபதி தேர்தல்
இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் உள்ள வறட்சி நிலை குறித்தும், மத்திய அரசு தரவேண்டிய நிவாரண உதவிகள் குறித்தும் பிரதமரிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு அளிப்பார் என்று தெரிகிறது. ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர் நிறுத்துவதில் தேசிய கட்சிகள் மும்முரமாகி உள்ளன. இத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி எதிர்க்கட்சித்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தேசிய அளவில் 3-வது முக்கிய கட்சியாக விளங்கி வரும் அதிமுகவின் நிலை என்பது குறித்து பிரதமரிடம் முதல்வர் தெளிவுப்படுத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்