முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்ட வருவாய் தீர்வாயத்தில் 110 பயனாளிகளுக்கு ரூ.10,33,050 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வட்டத்திற்குட்பட்ட 52 கிராமங்களின் வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்ச்சி கடந்த 17.05.2017 அன்று துவங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வந்தது. இந்த ஜமாபந்தியின் நிறைவு நாள் நேற்று 23ம் தேதி வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:

வருவாய் தீர்வாயம்
 வருவாய் தீர்வாயம் என்பது வருவாய் துறையின் கணக்குப் பதிவேடுகளை பார்வையிட்டு உறுதி செய்யப்பட்டு அதே வேலையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு அம்மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதில் சில மனுக்களுக்கு உடனடி தீர்வும் சில மனுக்களுக்கு பரிசீலனைக்கு பின்னர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அவ்வாறு வேலூர் மாவட்டத்தில் பேர்ணாம்பட்டு வட்டத்திற்குட்பட்ட 52 கிராமங்களில் ஜமாபந்தி கடந்த 17.05.2017 அன்று துவங்கப்பட்டு நேற்று வரை நடத்தப்பட்டு வந்தது. இந்த வருவாய் தீர்வாய நாளில் வரப்பெற்ற மொத்த மனுக்களின் எண்ணிக்கை 534 மனுக்கள். இவற்றில் 104 மனுக்களின் மீது விசாரனை நடத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 430 மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வேலூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் அரசு புறம்போக்கு ஏரி, குளம், குட்டைகளிலிருந்து மண், வண்டல் மண், சவுடு, கிராவல், ஏணையவை இலவசமாக எடுக்க 27.05.2017 வரை மனுக்கள் அளித்து அனுமதியினை பெற்றுக்கொள்ளலாம். இந்த மண் வகைகளை கொண்டு விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களின் தரத்தினை மேம்படுத்தவும், மண் வளத்தை பெருக்கி கொள்ளவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாத திட்டமாகும். இத்திட்டத்தினை ஒரு அரிய வாய்ப்பாக பயன்படுத்தி விவசாயிகள் பயன்படுத்தி தங்களின் விவசாய நிலங்களை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.பேர்ணாம்பட்டு ஏரியை பராமரித்து கல் வைத்து கட்டிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வூரில் உள்ள ஒரே ஒரு ஏரியினை முறையாக பராமரித்தால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் தீரும்

 

ரூ.40 லட்சம

நிலத்தடி நீரின் மட்டமும் உயரும். மேலும் பேர்ணாம்பட்டு வட்டம் வளத்தூரில் உள்ள 19 கிராமங்களை குடியாத்தம் வட்டத்திற்கு மாற்றிட கோரப்பட்டுள்ளது. பத்தளப்பள்ளி அணை கட்டுமாணப் பணிகள் சில இடையூறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களை நேரில் சந்தித்து தேவையான உத்தரவுகளை பெற வழிவகை செய்துள்ளார். இன்னும் சில மாதங்களில் கட்டுமானப்பணிகள் துவங்கும். மேலும் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்திற்கு புதுப்பிக்க குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் தனது சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 இலட்சம் ஒதுக்கியுள்ளார்கள். அதே போல் இந்த பகுதியில் உள்ள செல்வந்தர்கள் தங்களின் பங்களிப்பாக ஒரு நிதியினை சேகரித்து இப்பகுதியின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

இன்றைய ஜமாபந்தி நிகழ்ச்சியில் வருவாய்த்துறையி சார்பில் 48 நபர்களுக்கு ரூ.2,89,000- மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 56 நபர்களுக்கு ரூ.6,72,000- மதிப்பில் முதியோர் உதவித் தொகையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5,400- மதிப்பிலான சலவை பெட்டியும், வேளாண்மைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.66,650- மதிப்பிலான விவசாய கருவிகள் மற்றும் விதைகள் ஆக மொத்தம் 110 நபர்களுக்கு ரூ.10 இலட்சத்து 33 ஆயிரத்து 50- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர் வெங்கடேசன், கூட்டுறவு சங்க நிலவள வங்கித் தலைவர் சீனிவாசன், வட்டாட்சியர் பத்மநாபன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பேர்ணாம்பட்டு) அப்துல் கரீம், கலைச்செல்வி, (குடியாத்தம்) ஆனந்தன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இவ்விழாவின் இறுதியில் வட்டாட்சியர் சரவணன் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நன்றியுரை ஆற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்